பிக்பாஸில் செய்யப்படும் கர்ப்பப் பரிசோதனையால் பரபரப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்ல இந்தியாவில் பல மொழிகளிலும் பிரபல்யமடைந்து வருகின்றது. இந் நிகழ்ச்சியில் பல வருந்தத்தக்க, தமிழ் கலாசாரத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட விடயங்கள் இடம்பெற்று வருகின்றது.

இருந்தும் இந் நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்த்தாலும் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதில்லை. ஏனெனில் எதைப் பார்க்கக் கூடாது, செய்யக் கூடாது எனத் தடை விதிக்கப்படுகின்றதோ அதனைத்தான் அதிகம் நாடிச் செல்கின்றது மனித மனங்கள்.

இதேவேளை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு தெலுங்கிலும் சீசன் 3 ஆரம்பமாகியது. 50 நாட்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல பிரச்சினைகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் வீட்டை விட்டு அனுப்பப்பட்ட நடிகை ஹேமா கூறுகையில், பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்பம் குறித்த பரிசோதனை செய்து விட்டுத்தான் போட்டிகளுக்குத் தேர்வாகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடைசி சீசனில் போட்டியாளராக இருந்த உமா மகேஸ்வரியும் இது பற்றித் தெரிவித்துள்ளார். பெண் போட்டியாளர்கள் கர்ப்பமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பிக்பாஸ் பதிலளித்துள்ளது. அதாவது, போட்டியாளர்கள் கர்ப்பமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் தங்களால் வழங்கப்படும் கடுமையான டாஸ்குகளால் பாதிப்புக்கள் உண்டாகும் என்றும் அதேநேரம் இந் நிகழ்சிகள் பெரும்பாலும் மன அழுத்தப் பிரச்சினைகளைக் கொடுக்கும் என்பதாலுமே இப் பரிசோதனை செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post