உணவகத்தில் வெடித்துச் சிதறிய காஸ் சிலிண்டர்! 9 பேர் உயிரிழப்பு!! (படங்கள்)

காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்த சோகம் சீனாவின் கிழக்குக் கடற்கரை மாகாணத்தில் உள்ள உணவு விடுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் உணவு விடுதி மற்றும் அருகில் உள்ள கடைகளும் தீக்கிரையாகின.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் 200 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள்.

இதேவேளை காயமடைந்தவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
Previous Post Next Post