சுர்ஜித் மீட்பு நேரலையில் மூழ்கிய பெற்றோர்! தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி!!

திருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தையை மீட்கும் பணி சுமார் 80 மணித்தியாலங்களாக இடம்பெற்று வந்தது.

இந்த மீட்புப் பணிகள் தொலைக்காட்சி ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இவ் ஒளிபரப்பை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்.

அந்தவகையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதிகள் நேற்று திங்கட்கிழமை சுர்ஜித் மீட்புப் பணிகள் தொடர்பான நேரலையை தொலைக்காட்சியின் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களது இரண்டு வயது மகள் ரேவதி சஞ்சனா அவர்களுடன் இருந்துள்ளார். சற்றுநேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரெனக் காணாமல் போயுள்ளது.

சத்தம் வரவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது குளியல் அறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் குழந்தை தவறி விழுந்திருந்தது தெரிய வந்தது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post