“எங்களைப் பார்த்தால் அரசாங்கமே நடுங்கும்” நடிகர் விஜயின் தந்தை மிரட்டல்!!

எங்களைப் பார்த்தால் அரசாங்கமே நடுங்கும் என்று கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

அதேநேரம் குறித்த கனடா வாழ் தமிழர் அவருக்கு எதிராக மோசடி புகார் கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிராபிக் ராமசாமி படத்துக்காக பெற்ற ரூபா 21 இலட்சம் மோசடி செய்துள்ளதாகவும் பணத்தை விஜயின் தந்தை தர மறுத்து வருவதாகவுமே கனடா தமிழர் புகார் அளித்துள்ளார்.

இதேவேளை குறித்த பணத்தைத் திருப்பி கேட்டதற்கு, எங்களைப் பார்த்தால் அரசாங்கமே நடுங்கும் என்று தெரிவித்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post