நம்பிக்கையில் வீசி எறிந்த பணம்! குவிந்து கிடக்கும் பரிதாபம்!! (படங்கள்)

திருகோணமலை கோணோசர் ஆலயத்தின் ஆள் நடமாட்டம் அற்ற கடலை அண்டிய பகுதியில் யாருக்கும் உதவாத நிலையில் உக்கிப் போய் கிடக்கின்றது பணம்.

கடலின் குத்துச் சாய்வுப் பகுதியில் குறித்த நாணங்களும், நாணயத் தாள்களும் கொட்டிக் கிடக்கின்றன.

இப் பணங்கள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வீசியவையாகும்.

எத்தனையோ பேர் ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலையில் இவ்வாறு வீசி எறியப்பட்டுக் கிடக்கும் பணங்கள் ஆலயத்தின் தேவைக்கேனும் உதவாமல் கிடப்பது துரதிஷ்டவசமே.
Previous Post Next Post