சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் பௌத்த தேரர்! (படங்கள்)

ஒரு மதத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதே, தனது மதத்துக்குத் தலைவராக இருப்பதற்கான தகுதி என சில மதத் தலைவர்கள் எண்ணுகின்றார்கள்.

நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. ஒரு மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்து விட்டு இன்னொரு மதத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருப்பதை அந்த மதம் சார்ந்த ஆண்டவனும் ஏற்றுக் கொள்ளப் போறதில்லை.

இது இவ்வாறிருக்க அனைத்து மதத்துக்குமான தலைவர்களும் இந்த புவியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில், இலங்கையின் இரத்தினபுரி ரக்வென பகுதியில் சகோதர மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குவான பகவந்தலாவ ராகுல தேரர், இந்துக்களின் பிரதோஷ விரதத்தை முன்னிட்டு சிவலிங்கத்துக்கு பூஜைகள் செய்கின்றார்.

ஆம்! இவ்வாறானவர்கள்தான் அனைத்து மதத்திற்கும் தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டிய புனிதர்கள்.

இதேவேளை மத நல்லிணக்கமே நிச்சயமாக இன நல்லிணக்கத்துக்கு வழி ஏற்படுத்தும் என்பது பலருக்குத் தெரியாமல் போனது துரதிஷ்டவசமே. Previous Post Next Post