“வாழப் பிடிக்கவில்லை” கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்த 15 வயது மாணவி! (படங்கள்)

15 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் கிளிநொச்சி யூனியன்குளம் மாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.

கோணாவில் அ.த.கலவன் பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றார்.

நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூன்று மணியளவில் திரும்பி வந்துள்ளார். மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரைப் பார்வையிடச் சென்றிருந்த சமயத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனக்கு வாழப் பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கின்றேன் என கடிதம் எழுதி வைத்து விட்டே மாணவி இம் முடிவினை எடுத்துள்ளார்.

Previous Post Next Post