“என்னையும் கொன்று விடுங்கள்” கொலை செய்யப்பட்ட நபரின் கர்ப்பிணி மனைவி கதறல்!!

இந்தியா ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வல்லுறவுக்குப் பின் எரியூட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நான்கு பேரைக் கைது செய்த பொலிஸார் அவர்களைச் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் செல்ல முற்பட்டதனாலேயே அவர்கள் நான்கு பேர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரின் பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட சின்னகேசவலு என்பவரின் மனைவி கர்ப்பமாகவுள்ளார். அவர் தெரிவிக்கையில்,

எனது கணவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

எனவே என்னையும் அவரைச் சுட்டுக்கொன்ற இடத்திற்கு அழைத்தச் சென்று கொலை செய்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.

Previous Post Next Post