பருத்தித்துறையில் மோதல்! பலர் காயம்!! இராணுவம் குவிப்பு!!! (படங்கள்)

பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றதால் அப் பகுதியில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம் மோதல் சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த மோதலில் ஆண், பெண் வேறுபாடின்றி மோதிக் கொண்டதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பெருமளவு பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் அப் பகுதியில் நேற்று மாலை பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது அங்கு பெருமளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post