கைது செய்யப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி!

தான் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாகவும் கூட்டுப் பாலியல் சித்திரவைக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்ரர் பிரான்சிஸ் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசை இக்கட்டான நிலைக்குத் தள்ளியமை காரணமாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை இன்று காலை அவர் மனநல பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். இப் பின்னணியில் அவரைச் சந்தேக நபராகப் பெயரிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர்.

Previous Post Next Post