யாழில் ரவுடிகளை அடக்க களத்தில் இறங்குகிறது அதிரடிப் படை! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையின் சிறப்புச் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

யாழில் குறிப்பாக மண் கடத்தல், வாள்வெட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இச் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்செயல்களைத் தடுக்கும் கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூல வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் இச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் உரிய தகவல்களைத் தந்து உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Previous Post Next Post