நாடாளுமன்ற உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சி!

வவுனியாவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இத் தாக்குதல் முயற்சியில் அவரது பாதுகாவலர் கையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பாவற்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பொன்றை முடித்துக் கொண்டு வரும் வழியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்திலிருந்து இறங்கியுள்ளார்.

இந் நிலையில் அப் பகுதியில் நின்ற சிலர் வாள்களால் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்தனர். இதன்போது சுதாகரித்தக் கொண்ட பாதுகாவலர் தாக்குதல் முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இவ்வாறு தாக்குதல் முயற்சியை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.;

Previous Post Next Post