கட்டாயத் திருமணம்! ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் கடத்தப்படவிருந்த தமிழ் யுவதி!!

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞனுக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ் யுவதியை அவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத் திருணம் செய்து வைக்க பெண்ணின் வீட்டார் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த யுவதியை கட்டாயமாக விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு வரவிருந்த நிலையில் ஜேர்மனிப் பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதியை கட்டாயப்படுத்தி விமானத்தி்ல் ஏற்றி இலங்கை கொண்டு செல்ல யுவதியின் பெற்றோரும் சகோதரர்களும் முற்பட்ட போது யுவதி விமான நிலையத்திற்குள் கத்திக் குளறியுள்ளார்.

உடனடியாக விமான நிலைய ஊpயர்கள் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்ட போது பொலிசார் யுவதியை மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யுவதியின் தாயின் உறவினரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் மகனே மாப்பிளையாவர். திருமணம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த போது யுவதி பலவழிகளிலும் அதை தடை செய்துள்ளார்.

இதனால் பொறுமையிழந்த பெற்றோர் யுவதியை இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக ஏமாற்றி இந்தியாவில் வைத்து கலியாணம் கட்ட முற்பட்டதாகவும் இளைஞர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இஞ்சினியர் மாப்பிளை அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் இலங்கையில் வைத்தே கலியாணம் செய்ய வேண்டும் என கூறியதால் யுவதியை இலங்கைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வர பெற்றோர் முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த யுவதி யாழ்ப்பாண இஞ்சினியருடன் கதைத்துள்ளார் எனவும் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லியும் இஞ்சினிர் அதனை கருத்தில் எடுக்கவில்லை எனவும் ஜேர்மன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 ஆயிரம் யூரோ பணம் மற்றும் கொழும்பில் வீடு யாழ் நகரப்பகுதியில் 2 வர்த்தகநிலைய கட்டங்கள் மற்றும் கோண்டாவில் பகுதியில் 18 பரப்பு காணி என்பன மாப்பிளைக்கு சீதனமாக கொடுக்க ஜேர்மன் யுவதியின் பெற்றோர் சம்மதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post