கல்வியங்காடு பொதுச் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது! (படங்கள்)

கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த பழைய சந்தை முழுமையாக இடிக்கப்பட்டு இப் புதிய சந்தை யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்டது.

குறித்த பொதுச் சந்தை திறப்பு நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நாடாவை வெட்டி புதிய சந்தையைத் திறந்து வைத்தார்.

Previous Post Next Post