அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த உத்தரவு!

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் போது விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க பிரதானிகளுக்கு பொது நிர்வாக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய தேசியக் கொடியை உயர்த்தி, தேசிய கீதத்தைப் பாடுமாறும், இராணுவத்தினர் உட்பட நாட்டுக்காக தியாகம் செய்த அனைவருக்கும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் தங்களுக்கு வசதியான மொழியில் அரச சேவை உறுதி மொழிகளை வழங்க வேண்டும் என அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Previous Post Next Post