கணவருடன் கள்ளத் தொடர்பில் நடிகை! போட்டுடைத்த மனைவி!!

எனது கணவருடன் கள்ளத் தொடர்பில் நடிகை ஒருவர் உள்ளதாகத் தெரிவித்து மனைவியால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது நாடகங்களில் நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை மகாலட்சுமி.

இந் நிலையில் பிரபல சீரியலில் மகாலட்சுமியுடன் நடித்து வரும் நடிகர் ஈஸ்வருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக பொலிஸாரிடம் அவரது மனைவி ஜெயஸ்ரீ முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் திருமணத்திற்குப் பின் 30 இலட்சம் கடன் வாங்கியதும், அதனைக் கட்ட முடியாமல் தவித்து வருவதால் என்னை அடிக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மகாலட்சுமியுடனான தொடர்பிபைப் பற்றியும் கூறி அடித்து வந்தார். ஜெயஸ்ரீ கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post Next Post