வெட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! (படங்கள்)

கிளிநொச்சிப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியிலேயே நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி விக்னேஸ்வரன் (வயது-38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பாரிய வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Previous Post Next Post