தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! (படங்கள்)

தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் வசித்து வந்த பொன்னம்பலம் செல்லம்மா (வயது- 75) என்ற வயோதிபப் பெண்ணே இன்று சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

குறித்த வயோதிபப் பெண் சகோதரனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்றைய தினம் அவரின் சகோதரன் காணியைப் பார்ப்பதற்காக சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலையில் அயல் வீட்டுக்காருக்கு அழைப்பை ஏற்படுத்திய சகோதரன், எனது அக்கா வீட்டில் இருக்கிறார்.

அவருக்கு காலை உணவு கொடுக்குமாறு கூறியதையடுத்து அங்கு சென்ற இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த பெண் சடலமாக இருப்பதை அவதானித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Previous Post Next Post