முதியவரை மோதித் தள்ளிய பஸ்! யாழில் பதற்றம்!! (வீடியோ)

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் முதியவர் ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் படுகாயமடைந்தார்.

இச் சம்பவத்தால் அப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், படுகாயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் இன்று மாலை 3 மணியளலில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பருத்தித்துறைக்குப் புறப்பட்ட பேருந்து வளாகத்துக்குள் இருக்கும் அலுவலகத்திற்கு முன்பாக பயணித்த போது முதியவர் ஒருவரை மோதியது.

பேருந்தை சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அப் பகுதியில் மக்கள் கூடியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.


Previous Post Next Post