நித்தியின் அடுத்த அதிரடி! புதிய வீடியோ வெளியீடு!! (வீடியோ)

தனிநாடு உருவாக்கி அதற்கான புதிய கடவுச்சீட்டு, அமைச்சரவை, கொடி என்பன உருவாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் நித்தியானந்தா.

இருந்தும் அவர் எங்கு உள்ளார் என்று தெரியாமல் பொலிஸார் திணறி வரும் நிலையில், நித்தியானந்தா வீடியோக்கள் மூலம் ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகின்றார்.

வீடியோவைப் பார்க்க…

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் நித்தியானந்தா நித்தமும் இணையத்தின் ஊடாக குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து வருகின்றார்.

இந் நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தனக்கு கடவுளின் அருள் இருப்பதால் என்னை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் 2003 ஆம் ஆண்டு தம்மை சிலர் அழிக்க முற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடவுளின் அருளாலேயே தனது வளர்ச்சி மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக எதிர்ப்பவர்களுக்கு நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

ஈக்குவடோரில் உள்ள தீவை விலைக்கு வாங்கியிருக்கும் நித்தியானந்தா, அங்கு கைலாஷா என்கிற தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post