பொலிஸாரின் பிடியிலிருந்து தப்ப முயன்றவருக்கு நடந்த கதி! (வீடியோ)

கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபரால் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபா் ஒருவரை பொலிஸார் கைது செய்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபரை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது சந்தேகநபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.

இதனால் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த பதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி காயமடைந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தரும், சந்தேகநபரும் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சந்தேகநபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post