தலைக்கவசம் இன்றி அதிக வேகம்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!! (படங்கள்)

தலைக்கவம் இன்றி அதிக வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி, வேகக் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை வசிப்பிடமாகக் கொண்ட இரவீந்திரன் தனுசன் (வயது-25) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த பொங்கல் தினத்தன்று அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு தனது வீடு நோக்கி திரும்பி வரும் வழியில் அல்வாய் உள்ளுர் வீதியில் அமைந்துள்ள வளைவில் அதிக  வேகத்தால் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மரம் ஒன்றுடன் மோதியது.

தலைக்கவசம் இன்றி பயணம் செய்தமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆறு நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Previous Post Next Post