மண்டைதீவு உறுப்பினருடன் அநாகரிகமாக நடந்து கொண்ட உதவியாளர்! (வீடியோ)

வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குத் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனத் தெரிவித்து வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனை முற்றுகையிட்டு தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்திருந்தனா்.
குறித்த கூட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள், வேலணை பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களுடன் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமை தொடர்பில் விளக்கமளித்த அங்கஜன் இராமநாதன், அவர்களை கூட்டத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாத சபை உறுப்பினர்கள் கூட்டத்திற்குச் செல்லாது பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலணை பிரதேச சபையின் மண்டைதீவு உறுப்பினர் அ.ஸ்ரீபத்மராஜாவை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் உதவியாளர் “வெற்றிலை தாறம் சப்பிக் கொண்டு நில்லுங்கள்” என்று அநாகரிகமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Previous Post Next Post