யாழ்.பல்கலையில் பகிடிவதை! வெளியான செய்தியில் உண்மையில்லை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு இலக்காகிய மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் குறித்த செய்தியில் உண்மையில்லை எனவும் அப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் யாழ்.பல்கலைக்ககழக மாணவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இச் சர்ச்சை அடங்குவதற்குள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள மாணவ பிரதிநிதியொருவரால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளை கலைப்பீட மாணவர் ஒன்றியப் பிரிதிநிதி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பகிடிவதைக்கு உள்ளானதாகக் குறிப்பிட்ட மாணவன் அந்தச் சம்பவத்தை மறுத்துள்ளார். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், நடந்த சம்பவம் தவறாக திரிவுபடுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post