இலங்கையில் தாண்டவம் ஆட ஆரம்பித்தது கொரோனா! இன்று மட்டும் 20 பேருக்கு தொற்று!!

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா இலங்கையிலும் அதி வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், கோரோனா வைரஸ் தொற்றால் மேலும் 10 பேர் இன்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அத்துடன்இ இன்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 17 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 173 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
Previous Post Next Post