யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மருத்துவர் வெளியிட்ட தகவல்!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் ஒரே சூலில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 02 ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனா என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.
தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப் பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளனர். கடந்த வருடம் கவுற்றிருந்த கீர்த்திகா கடந்த 02 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப் பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர்.

தற்போது குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் தெரிவித்தார்.

குழந்தைகள் தொடர்ந்தும் வைத்தியசாலை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வெகுவிரைவில் வீடு செல்லக் கூடிய நிலைமை ஏற்படும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 குழந்தைகள் ஒரு பிரசவத்தின் மூலம் பெறப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்று மருத்துவ நிபுணர் மகிழ்ச்சி வெளியிட்டார்.


Previous Post Next Post