நயினாதீவு, நெடுந்தீவுப் பகுதிகளுக்குள் நுழையத் தடை விதிப்பு!

நாட்டில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தம் பலவிதமான வேலைத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவகப் பகுதிகளுக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

இவ்வாறு குறித்த பகுதிகளுக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத் தடை தொடர்பான அறிவித்தல் அரசாங்க அதிபரினால் அந்தந்த பிரதேச செயலர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post