இலங்கைத் தமிழ்ப் பெண் கனடாவில் சுட்டுக்கொலை! (படங்கள்)

கனடாவின் – ரொரண்டோ, ஸ்காபரோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழ் பெண்ணொருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்டவா் 38 வயதான தீபா சீவரத்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரொரண்டோ பொலிஸார் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

பிரிம்லி ஆர்.டி.க்கு அருகிலுள்ள முர்ரே அவன்யு பகுதியில் துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் இடம்பெற்றதை அறிந்து பொலிஸார் அந்தப் பகுதிக்கு வரைந்தனா். அங்கு வந்த பொலிஸார் சம்பவ இடத்தில் வீட்டுக்குள் இருபெண்கள் சுடப்பட்டுள்ளதை கண்டறித்தனா்.

அவா்களில் ஒருவா் உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சனிக்கிழமை இவரது பிரேத பரிசோதனை இடம்பெற்றது. மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தமையே மரணம் சம்பவிக்கக் காரணம் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச் சந்தேக நபர் 5.8 முதல் ஆறடி உயரம் மதிக்கத்தக்க கறுப்பு நிற ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் படுகொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவ நேரம் அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அல்லது துப்பாக்கிச் சூடு குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவா்கள் உடனடியாக 416-808-7400 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவினா் இலக்கமான 416-222- (8477) என்ற இலக்கத்துக்கும் இரகசிய தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனா்.
Previous Post Next Post