கொரோனாவினால் இலங்கையில் நிகழ்ந்த முதலாவது உயிரிழப்பு!

உலகில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இலங்கையில் இதுவரையில் 110பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அங்கொட வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார். 60 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இன்று சுகாதாரதுறையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post