யாழில் கொரோனா நோயாளியின் வீட்டிற்குள் களமிறங்கியது சுகாதாரத் துறை! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரின் வீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.செம்மணி தேவாலயத்திற்கு வருகைதந்த சுவிஸ் நாட்டு போதகர் ஒருவருடன் பழகிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.தாவடி பகுதியை சோ்ந்த நபருடைய வீடு மற்றும் அவா் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் பொலிஸாா், இராணுவம் ஆகியவற்றின் பாதுகாப்புடன் குறித்த நபருடைய வீடு, அருகில் உள்ள கோவில்கள்,  வா்த்தக நிலையங்கள் மற்றும் அயலில் உள்ள வீடுகள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந் நடவடிக்கையை நல்லூா் பிரதேச சபை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post