நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தின் உதவி! (படங்கள்)

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினால் பொது சுகாதார பரிசோதர்களுக்குத் தேவையான கையுறைகள், முகக் கவசங்கள் மற்றும் விசேட உடல் கவசங்கள் போன்றன இன்று (08) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 150 எண்ணிக்கையான பொருட்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆலய அறங்காவலர் சபையினரால் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தேவைக்கே இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post