தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடந்த அனர்த்தம்! ஒருவர் பலி!!

யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நாளைய பங்குனி திங்களை முன்னிட்டு ஆலயத்தை கழுவும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவரே உயிரிழந்தார்.

வாகனங்களை கழுவ பயன்படும் கொம்பிரேசர் மூலம் ஆலயத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட மின்ஒழுக்கின் காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்து மகாசபை செயற்பாட்டாளரான செந்தூரன் என்பவரே உயிரிழந்துள்ளார். தங்கம்மா அப்பாக்குட்டியின் பெறாமகன் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post