யாழில் முதல் கொரோனா நோயாளியின் தற்போதைய நிலை! சற்றுமுன் வந்த தகவல்!!

யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா நோயாளியான தாவடிப் பகுதியைச் சேர்ந்தவரின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்கள் அல்லது கிழமைகளின் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் சற்றுமுன் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்ட கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 22 ஆம் திகதி விவேகானந்தன் சிவநாதன் என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் இன்று உடல் நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை பணிப்பாளர் தனது முகநூல் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post