யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை வழிமறித்துள்ளனர். எனினும் அந்தக் கார் நிறுத்தாது சென்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர்.

அந்த காரை செலுத்திச் சென்றவர்m தன்னை சட்டத்தரணி என்று பொலிஸாருக்கு அறிமுகம் செய்தார். எனினும் அவர் மதுபோதையில் இருப்பதை முகத்தோற்றளவில் அறிந்துகொண்ட பொலிஸார்m சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கோரியுள்ளனர்.

இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரமும் அந்த இளம் சட்டத்தரணியிடம் இல்லை. அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நாளை சட்டத்தரணிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் முற்படுத்தப்படவுள்ளார்.
Previous Post Next Post