பிரான்ஸ் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் யுவதி! குவியும் வாழ்த்துக்கள்!!

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.  இம் முறை பிரான்ஸில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்களில் Ile de France பிராந்தியத்தில் பல இடங்களில் எம்மவர்களும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளுக்காக களம் இறங்கி இருந்தனர்.


இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் எமது இளைய தலைமுறையினர் எம் தேசியத்தின் பாதைக்கு உரமூட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.

மேலும் தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் உங்கள் சேவை தொடரட்டும் என்றும் அவர்கள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.
Previous Post Next Post