யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாகனத் தொடரணி விபத்து!

கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கொடிகாமம் வைத்திய சாலைக்கு முன்பாகவே குறித்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார்.
அந்த சந்திப்பினை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட அவரும், அவருடைய பதுகாப்பு பிரிவினரும் இன்று அதிகாலையளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் வரும் வழியில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் வந்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு துணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகனம் பெரிய அளவில் சேதத்திற்கு உள்ளான போதும், அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post