
45 இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் ஏ-9 வீதியையும், கச்சேரி கிழக்கு வீதியையும் இணைக்கும் 317 ஆதன இலக்க வீதி மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாநகர அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதியை புனரமைப்பதற்கான முன்மொழிவினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் உறுப்பினர் கிருபாகரன் என்பவர் முன்மொழிந்திருந்தார்.
அதற்கு சபையில் ஒப்புதல் வழங்கப்பட்டு 16 இலட்சம் ரூபா நிதியில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று அங்கு சென்ற புகையிரத நிலையப் பொலிஸார் மாநகரசபை உறுப்பினரையும் வீதிப் புனரமைப்பினைக் கண்காணித்த பொறியியலாளரையும் நேற்றைய நாள் விசாணைக்கு அழைத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்று மீண்டும் அழைக்கப்பட்ட அவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் சரீரப்பிணையில் செல்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியதுடன் வேலைகளை இடைநிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.