பிரான்ஸில் முழுமையாக அகற்றப்படுகிறது பெற்றோல், டீசல் வாகனங்கள்!

பிரான்சில் அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து உணவகங்கள் மற்றும் கபேக்களின் மாடிகளில் வெப்பசாதனம் (chauffage) பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேவையின்றி ஆற்றல் வீணாக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சரான Barbara Pompili தெரிவித்துள்ளார்.

என்றாலும், உணவகத்துறை கொரோனாவின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த தடை குளிர்காலம் முடிவடையும்போதுதான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

•••ஆகஸ்ட் 3 முதல் புதிய மாற்று மானிய அமைப்பு அமுல்படுத்தப்படும்•••

"டீசல் வாகனங்களுக்கு மிக விரைவாக மானியம் வழங்குவதை நிறுத்திவிடுவோம் என்று நம்புகிறோம்". புதிய பதிப்பு மாற்று மானியம் ஆகஸ்ட் 3 முதல் நடைமுறைக்கு வருகிறது.

சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான அமைச்சினால் இந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் படி, Crit'Air 1 அல்லது 2, வாகனம் வாங்குவதற்கு தனிநபர்கள் 1,500 முதல் 3,000 யூரோக்கள் பெறுவார்கள் , டீசலில் இயங்கும் சில வாகனங்கள்,சூழலை மாசுபடுத்துகிறது.

எனவே மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்கப்படுத்தும் முகமாக இந்த மானிய சலுகை என விளக்கினார் சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான அமைச்சர் பார்பரா பொம்பிலி.

"ஆமாம், டீசல் வாகனங்கள் எதிர்கால வாகனங்கள் அல்ல என்பதால் மிக விரைவாக மானியம் வழங்குவதை நிறுத்த விரும்புகிறேன்" என்று அமைச்சர் கூறினார்.

இந்த புதிய மாற்று மானியத்தின் நோக்கம் "அதிக எண்ணிக்கையிலான நபர்களை இந்த நடவடிக்கையிலிருந்து பயனடைய அனுமதிப்பது". "Crit'Air 3 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய வகைப்படுத்தப்பட்ட அனைத்து வாகனங்களையும் (2006 க்கு முன் பதிவுசெய்யப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 2011 க்கு முன் பதிவுசெய்யப்பட்ட டீசல் வாகனங்கள்) அகற்றப்படும்" என்று சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post