பொலிஸில் முறையிட்ட மகள்! நான்கு மாதத்தின் பின் தந்தை கைது!! யாழில் சம்பவம்!!!

தகாத வார்த்தைகளால் பேசி தன்னை துன்புறுத்தியதாக மகள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 4 மாதங்களின் பின்னர் தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

சுன்னாகத்தில் வசிக்கும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பம் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மயிலிட்டியில் உள்ள தமது வீட்டை பார்க்கச் சென்றிருந்த சமயம், தந்தை தனது கையை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக மகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

எனினும் தந்தை வேலை நிமித்தம் வெளிமாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்தபோது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவரை நீதிமன்றில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும் மகளின் செயல் ஒன்றை கண்டிக்கும் வகையிலேயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.
Previous Post Next Post