யாழில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார் இளைஞனை மோதித் தள்ளியது! (படங்கள்)

யாழ்.அராலி பகுதியில் காருடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த வரதராசா நிதுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞன் அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


காரானது குறித்த இளைஞனை மோதிவிட்டு வீதியை விட்டு வெளியே பாய்ந்து சுமார் 25 அடிகள் தூரத்திற்கு மதிலை இடித்து தகர்த்துள்ளது.

காரின் சாரதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான காரணம் எனப் பொலிஸார் கூறுகின்றனர்.

Previous Post Next Post