மீண்டும் அடுத்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இதற்கமைய அடுத்த வாரம் 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதிவரை அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒன்று தொடக்கம் 10ஆம் தரம் வரை பாடசாலைகள் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post