சுவிஸில் தமிழ்க் கடைகள் அதிகம் உள்ள பகுதியில் இலங்கையர் மீது கத்திக்குத்து!

சுவிற்சர்லாந்தின் லுட்சன் மாநிலத்தில் இலங்கையர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் லுட்சன் மாநிலத்தில் உள்ள வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத்தொகுதி ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல்தாரியும், தாக்குதலுக்கு இலக்கான நபரும் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட தகராறின் போது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.


இதன் போது கழுத்துப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான 45 வயதுடைய இலங்கையர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காயமடைந்த நபர் அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 65 வயதுடைய நபரை கைது செய்ய லுட்சன் மாநில பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வாசல்திராஸா வீதியில் உள்ள வணிகத் தொகுதியில் அதிகளவில் தமிழ்க் கடைகள் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post