“நான் இப்போது உங்களைத் தாக்க மாட்டேன்” பிரான்ஸ் ஜனாதிபதியை மிரட்டிய நபர்! (வீடியோ)

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (42) தனது மனைவி பிரிஜிட்டுடன் (67) பாதுகாவலர்கள் சூழ தன் வீட்டருகே நடைப்பயிற்சி செல்லும்போது, திடீரென ஒரு கூட்டம் அரசு எதிர்ப்பாளார்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இம்மானுவல் மக்ரோன் ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் குரல் எழுப்பினர். ஆனால் சற்றும் பதற்றம் அடையாத மக்ரோன், அவர்களுக்கு விளக்கமளிக்க முயன்றார்.

அப்போது ஒருவர் ’Virez la BRAV, அருமை என மக்ரோனை அவரது முகத்துக்கு நேராகவே விமர்சித்தார். மற்றவர்கள் ஊளையிட்டதோடு மோசமான வார்த்தைகளால் அவரை விமர்சிக்க, இந்த பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ட்விட்டர், முகநூல் உட்பட சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பானது.

மக்ரோனை ’Virez la BRAV’ என ஒருவர் விமர்சிக்க காரணம், மக்ரோன் திரைப்படம் ஒன்றில் வரும் ஒரு கதாபாத்திரம்போல் கருப்பு லெதர் ஜாக்கெட் அணிந்திருந்ததாகும்.

அத்துடன், அந்த கதாபாத்திரம் எத்தகைய சூழலிலும் தன்னை கூலாக வைத்துக்கொள்ள முயற்சிக்குமாம். அதேபோல், இத்தனை பேர் சூழ்ந்துகொண்டு குரலெழுப்பினாலும், ஊளையிட்டாலும் கூலாக நடந்துகொள்ள முயன்றதால் மக்ரோன் இவ்வாறு விமர்சிக்கப்பட்டார்.

மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நிகழ்த்திய வன்முறை தொடர்பான ஒரு விவாதத்திற்குப் பின், மக்ரோன் கூட்டத்தினரைப் பார்த்து கூலாக இருங்கள், எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூற தொடர்ந்து மக்கள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துவிட்டனர்.

(14/07/2020) இன்று விடுமுறை தினம், நான் என் மனைவியுடன் நடைப்பயிற்சிக்கு வந்திருக்கிறேன் என்று கூறிய மக்ரோன், தான் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதைப் போலவே பொதுமக்களும் மரியாதை கொடுக்கவேண்டும் என்றார்.

அதற்கு ஒருவர், திரு.ஜனாதிபதி அவர்களே, நான் உங்களை விட வயதில் பெரியவன், நீங்கள் என் பணியாளர், நாங்கள் உங்களை அவமதிக்கவில்லை, குறைந்தபட்சம் இன்றைக்காவது... என்றார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர், கவலைப்படாதீர்கள், இன்று நான் அவரை தாக்கமாட்டேன், 2021இல் வாக்கெடுப்பு நடக்கும்போது எனது வாக்கினால் அவரை தாக்குவேன் என்றார் அவர்.

இந்த ஆண்டுடன் மக்ரோனின் பதவிக்காலம் முடிவடைவதும், அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. மக்ரோனும் அவரது மனைவியும் அதற்குப் பின் பாதுகாப்பாக நடந்தே வீடு சென்று சேர்ந்தார்கள்.
Previous Post Next Post