யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இராணுவத்தினரால் முற்றுகை!

தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் இராணுவம் மற்றும் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 50 ற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகளை நினைவுகூரும் தமிழீழ கரும்புலிகள் நாள் என்பதால் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலேயே மேற்படி முற்றுகை நடத்தப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று காலை அலுவலகத்திற்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.Previous Post Next Post