இல்-து-பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! அலட்சியப்படுத்தும் அரசு!!

இல்-து-பிரான்சிற்குள் கொரோனர் தொற்றுக்கள் கட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது.

ஜுலை 11ம் திகதி அறிவிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இல்-து-பிரான்சில் மட்டும் 25 புதிய கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் (clusters) கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 7 பொரிய கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் பரிசில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன.

இளைஞர்கள் தங்கங்கள், பல்கலைக்கழகத் தங்ககங்கள் போன்ற பல பெருந்தொகுதிகள் கொரொனாத் தொற்றிற்கு உள்ளாகி இருப்பதை இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படியாகத் தொற்றுக்கள் பலமாக உள்ள நிலையில், இசைத் திருவிழா உட்பட பல வெளியக நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முகக்கவசம், பௌதீக இடைவெளி என எந்தவிதமான பாதுகாப்புகளும் இன்றி ஒன்று கூடுவது மிகவும் ஆபத்தான இரண்டாவது தொற்றலையை ஏற்படுத்தும் என பிரான்சின் விஞ்ஞானக்குழு பலத்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.
Previous Post Next Post