யாழில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்த இராணுவச் சிப்பாய்க்கு நடந்த கதி!

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.


இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது.

படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post