பிரான்சில் வேகம் எடுக்கும் கொரோனா! இரண்டாம் அலை இல்லை என்கிறது அரசு!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (COVID -19) பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆயிரத்து 392பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதிக்கு பிறகு (1,588பேர்) தற்போது மீண்டும் COVID-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 196பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 647பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 385பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 81ஆயிரத்து 311பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து பிரான்ஸில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன.

எனினும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு ஆளாகவில்லை என்று சுகாதார அமைச்சர் Olivier Véran கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் நோய் புதியதொரு எழுச்சியை பெற்றுவிடக் கூடாது என்பதால், பொறுப்புடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஒரு சில நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகாரிப்பது போல் தெரிந்தாலும், அது சோதனையின் அளவு அதிகரித்ததன் காரணமாக அப்படி தெரிகின்றன.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் சமீபத்தில் ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று எச்சரித்தார். இதன் காரணமாக ஸ்பெயினில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர், நாங்கள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளில் இல்லை, நாங்கள் ஒரு தொற்றுநோயை அடுத்து இருக்கிறோம்.

சில மருத்துவமனைகளில் நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. நாங்கள் இன்னும் நிறைய சோதனை செய்கிறோம். எங்கள் அதிகாரிகளின் உறுதியான நடவடிக்கை மூலம் தான் இந்த இரண்டாவது அலையைத் தவிர்ப்போம். ஆனால் தடுப்பூசி ஒரு அவசரத் தேவை என்பதை அவர் உறுதிபடுத்தினார்.
Previous Post Next Post