தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை சோதனையிட்ட பொலிசார், தேர்தல் பிரச்சார சுவரொட்டி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இன்று கரும்புலி நாள் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள் நடக்காமல் இராணுவம், பொலிசார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகம் முற்றுகையிடப்பட்டிருந்தது. எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் திருநேல்வெலியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணின் அலுவலகத்தை இராணுவம், பொலிசார் சோதனையிட்டனர். இதன்போது, தேர்தல் சுவரொட்டி வைத்திருந்தாக குறிப்பிட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post