டிப்பர்-மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

  மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் நாஸர் நஜாத் வயது 19 என்ற இளைஞரே இன்று மதியம் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமயத்தில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து பொலனறுவை பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதியதிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து சம்பவத்தையடுத்து வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post