பிரான்ஸில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா! ஒரே நாளில் 2288 பேருக்குத் தொற்று!!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

(06/08/2020)வியாழக்கிழமை மட்டும் 1,604 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று (07/08/2020) வெள்ளிக்கிழமை மட்டும் 2,288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஆபத்தான நிலைமையைப் பிரான்சில் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வைத்தியசாலைகளில் 12 பேர் மரணமடைந்துள்ளனர்,

20 நோயாளிகள் புதிதாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று ஆரம்பத்திலிருந்து பிரான்சின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 30,324

வைத்தியசாலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 19,818
வயோதிப இல்லங்களின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,541

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 5,011

உயிராபத்தான நிலையில் COVID-19 அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 383 இது நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

முற்றாகக் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பிவர்களின் மொத்த எண்ணிக்கை 82,836.
Previous Post Next Post